ஏகஇறைவனின் திருப்பெயரால்....
உலகை உற்று நோக்கச் செய்த அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் போராட்டம்.
உலகை உற்று நோக்கச் செய்த அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் போராட்டம்.
அரசுக்கு எதிராக முதன் முதலில் மக்கள் புரட்சி வெடித்தது துனீசியாவில் அதையடுத்து எகிப்து, ஏமன், லிபியா, பஹ்ரைன் இறுதியாக சவுதியில் ஷியாப் பிரிவினர்களின் சூழ்ச்சியால் வெடிக்கவிருந்த கலகத்தை அல்லாஹ்வின் உதவியால் சவுதி அரசாங்கம் ஒடுக்கியது. மேற்காணும் நாடுகளில் அரசுக்கெதிரான கிளர்ச்சிகள் நடக்கும் பொழுது புகையை ஊதி நெருப்பாக்கும் கைங்கரியத்தை அமெரிக்கா செய்யத் தவற வில்லை.
அவர்களின் நாட்டில் இவைகள் எல்லாம் நடக்காது என்றே எண்ணி வந்தனர் அவர்களால் சொர்க்க பூமி என்று வர்ணித்து வந்த இஸ்ரேலில் வெடித்தது முதல் கிளர்ச்சி அதைப் பார்த்து மலைத்தேப் போயினர். இது அமெரிக்கா, ஐரோப்பாவில் வெடிக்காமல் இருப்பதற்கான ஆயத்தப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுதே கடந்த மே மாதம் ஸ்பெய்னில் வெடித்தது அடுத்தக் கிளர்ச்சி ஸ்பெயின் மேட்ரிட் நகரில் அரசைக் கண்டித்து பிரம்மாண்டமாகப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
இதைப் பார்த்த அமெரிக்க மக்களால் சும்மா இருக்க முடியவில்லை அமெரிக்காவிலும் பொருளாதாரச் சரிவு, வேலையில்லாத் திண்டடாட்டம், போன்றவைகளைக் கூறிப் போராட்டம் நடத்த முடிவு செய்து முதல் கட்டப் போராட்டத்தை அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான பூங்கா ஒன்றில் தொடங்கினர். இதிலிருந்து தான் வால்ஸ்ட்ரீட் போராட்டம் என்றப் பெயர் உருவானது.
பூங்கா உரிமையாளரைத் தூண்டி விட்டு போராட்டக் காரர்களை வெளியேற்றச் செய்தது அமெரிக்க அரசு. இதையறிந்த போராட்டக் காரர்கள் சினம் கொண்டு போராட்டத்தை வீரியப் படுத்தும் விதமாக அமெரிக்காவின் முக்கியப் பகுதிகளிலும் அமெரிக்காவிற்கு வெளியிலும் நடத்துவது என்று முடிவு செய்து அதை சூட்டோடு சூடாக நடைமுறைப் படுத்தவும் தொடங்கினர் அது அமெரிக்காவிற்கு வெளியில் 80 நாடுகளில் போராட்டங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
டைம் சதுக்கத்தில் நடந்தப் போராட்டத்தில் போராட்டக் காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் நடந்த மோதலில் இரண்டு போலீஸாரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. ரோமில் நடந்த போராட்டத்தில் போராட்டக் காரர்களுக்கும் போலீஸாருக்கு இடையில் நடந்த மோதலில் 26 போலீஸார் படுகாயமடைந்துள்ளனர்.
இது தவிர லண்டனின் செயின்ட்பால், ஆஸ்திரேலியாவின் சிட்னி, ஜப்பானின் டோக்யோவில் நடந்த போராட்டங்கள் பெரும் பதட்டத்துடன் முடிந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அக்டோபர் 16 அன்று நியூயார்க் மன்ஹாட்டன் நகரில் மீண்டும் ஆயிரம் பேர் கூடி வால்ஸ்ட்ரீட் ஆக்ரமிப்புப் போராட்டம் என்றப் பெயரில்; பேரணி ஒன்றை நடத்தி உள்ளனர் பொருளாதாரச் சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம் என்றுக்கூறிப் போராட்டத்தைத் தொடங்கியவர்கள் இன்று ஆக்ரமிப்பு என்றப் பெயரில் போராட்டத்தை நடத்தியதால் அமெரிக்க அரசு அதிர்ச்சிக்குள்ளாகி போராட்டக் காரர்களை அதிகமாக கைது செய்ய உத்தரவுப் பிறப்பித்துள்ளது இதனடிப்படையில் 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பிற நாடுகளை ஆக்ரமித்து, பிற நாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டிப் பிழைப்பு நடத்திய அமெரிக்க, ஐரோப்பிய ஆட்சியாளர்களின் தவறானப் பொருளாதாரக் கொள்கையால் திடீரென சரிந்த பொருளாதாரத்தால் ஏற்பட்ட வறுமை. வேலையில்லாத் திண்டாட்டத்தை நிமிர்த்து நிருத்துவதற்குள் உள்நாட்டு கிளர்ச்சியால் அதள பாதாளத்திற்கு நாட்டை இழுத்துச் செல்வதிலிருந்து தடுத்த நிருத்துவது கடினம்.
இவர்களின் பிற நாடுகள் மீதான ஆக்ரமிப்புகளால் வாரிசுகளை இழந்த உறவுகள் இறைவனிடம் கை ஏந்தியதை இவர்கள் அனுபவிக்கும் காலத்தின் தூரம் அதிகமில்லை என்பதையே மேற்காணும் நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன.
...அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை. புகாரி: 1495
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

