சனி, அக்டோபர் 29, 2011

மூழ்கிய கப்பலின் கேப்டன்.

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

فَأَمَّا الَّذِينَ كَفَرُواْ فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ

(என்னை) மறுப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடுமையாகத் தண்டிப்பேன். அவர்களுக்கு எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்.''  என்று அல்லாஹ் கூறியதை நினைவூட்டுவீராக! 3:56




மூழ்கிய கப்பலின் கேப்டன்.

முக்கிய முடிவுகள் என்ற தலைப்பில் மோசமான முடிவுகளை மேற்கொண்ட ஜார்ஜ் புஷ் தனது ஆட்சி காலத்தில் நடந்த சில சம்பவங்களை புத்தகமாக எழுதி இருப்பதாகவும் புத்தகம் விற்பனைக்கு வந்த முதல் நாளே 1 லட்சத்து 70 ஆயிரம் பிரதிகள் விற்று இருப்பதாக பத்திரிகை செய்திகள் கூறுகிறது.

தான் எழுதிய புத்தகத்தை எல்லோரும் படித்து தன்னை மன்னிக்க வேண்டும் என்பதற்காக ஈராக் விஷயத்தில் தவறிழைத்து விட்டதாக குறிப்பிட்டிருப்பதை முன்கூட்டியே வெளிப்படுத்தி புத்தக விற்பனைக்காக விளம்பரத்தை தேடிக் கொண்டார்.

ஈராக்கில் போர் தொடுப்பதற்காக எடுத்த முடிவு தவறான முடிவு என்றும், ஈராக் போரில் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டதும் தவறான முடிவு என்றும், ஈராக் போர் நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் தான் மூழ்கிய கப்பலின் கேப்டன் போல் இருந்ததாகவும் எழுதி இருப்பதாக அந்த பத்திரிகை செய்தி கூறுகிறது.

இது இப்பொழுது பிறக்கும் ஞானோதயம் அல்ல அன்று சிறு குழந்தையும் கூட இதைத் தவறு என்று பேனர் பிடித்து உலகம் முழுவதும் ஊர்வலமாக சென்றது உலக மக்களுக்கு நினைவிருக்கும்.

ஒரு வாதத்திற்காக இப்பொழுது அவர் வருந்துவதை உண்மை என்று எடுத்துக் கொள்வதாக இருந்தால் சத்தாம் ஹூசைன் தூக்கிலேற்றப்பட்டு பேரழிவு ஆயுதம் ஈராக்கில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டப் பின் அவரது இறுதியான ஈராக் பயணத்தில் ஈராக் பிரதமர் நூரி அல்மாலிக்கி ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது சொல்லி இருந்திருக்கலாம், மாறாக ஈராக் விஷயத்தில் தான் எடுத்த முடிவு சரி தான் என்று அதிலும் ஆனித்தரமாக அடித்துக் கூறினார் அதனால் தான் முன்தாஜர் அல்ஜெய்தியின் ஷூ க்கள் இரண்டும் அவரது முகத்தை நோக்கி சினம் கொண்டு சீறிப் பாய்ந்தன.

1 லட்சத்து, 9 ஆயிரத்து, 32 உயிர்களை ஈராக்கில் மட்டும் பலிகொடுத்து அடால்ப் ஹிட்லரையும், பெனிட்டோ முசோலினியையும் அமெரிக்கா ஓவர்டேக் செய்து விட்டது என்று விக்கிலீக்ஸ் உண்மையைப் போட்டு உடைத்து விட்டக் காரணத்தால் ஏற்கனவே எழுதிக் கொண்டிருந்த தனது சுயசரிதையில் போலியான இந்த வருத்தத்தை மேலதிகமாக சேர்த்திருக்கலாம்.

முஸ்லீம்களை இனச் சுத்திகரிப்பு செய்வதற்கு சதி திட்டம் தீட்டும் யூதர்களின் கைக்கூலி இவர். இந்த பயங்கரவாதி புஷ் யூத சியோனிஸ்டுகளின் கைக்கூலி என்பதற்கு யூத சியோனிஸ்டுகளில் பண முதலைகள் நடத்தும் பயங்கரவாத பில்டர்பேர்ஜ் எனும் ரகசிய அமைப்பின் உறுப்பினர் என்பதையும், இந்த பயங்கரவாத அமைப்பின் ரகசிய கூட்டமொன்றில் கலந்துகொண்ட மாட்ரிக்ஸ் பத்திரிக்கை ஆசிரியர் எழுதிய கட்டுரையில்மேற்குலகின் முக்கிய பிரமுகர்கள் ஸ்காட்லாந்து கிராமப்புர ஹோட்டல் ஒன்றில் அதிதீவிர பாதுகாப்புடன் கூடிய 46 வது கூட்டத்தில், உலகில் தம் ஆதிக்க எல்லையை விரிவுபடுத்தி தங்கள் கலாச்சார பண்பாட்டு திட்டங்களை திணிப்பது சம்பந்தமாகவும், வல்லரசு நாட்டின் ஆட்சியாளர்களாக யார் வர வேண்டும், யார் வரக்கூடாது என்பது வரை விவாதித்து முடிவெடுக்கப்பட்டு இதற்கான பொறுப்பை நியூஜர்ஸி கவர்னர் கிறிஸ்டின் லீட் வயிட்மான் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று எழுதி இருந்ததை சவுதியின் அல்முஜ்த்தமா பத்திரிகை அம்பலப் படுத்தியது நினைவிருக்கலாம்.

அகண்ட இஸ்ரேல் உருவாவதற்கும், ஆப்கான், ஈராக் மீதான பண்ணாட்டுப் படைகளின் பயங்கர தாக்குதலுக்கும் பிண்ணனியில் 1954 முதல் ரகசியமாக இயங்கி வரும் இந்த சர்வதேச பயங்கரவாத அமைப்பே காரணமாக இருக்கும் என்பதற்கு ஆதாரமாக தி நியு வேல்ட் ஆர்டர் இன்டலிஜன்ஸ் அப்டேட் என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் கொஸோவோ போர் முடிவுக்கு வந்தால் ஸைப்ரஸில் மற்றொரு போர் வெடிக்க வேண்டும் என்ற திட்டம் தீட்டப்பட்டதை எழுதி இருந்தார்.

இவ்வமைப்பில் இயற்றப்படும் தீர்மாணங்கள் வெளியில் தெரிய விட மாட்டார்கள் மீறி தெரிய வந்தால் என்ன விலை கொடுத்தேனும் தடுப்பார்கள் அல்லது செயலிழக்கச் செய்வார்கள். விடுதலைப் புலிகள் கழுத்தில் மாட்டி விடப்பட்ட சயனைடு புட்டியைப் போல் பில்டர்பேர்ஜ் உறுப்பினர்களுடைய வாய்களில் திறக்க முடியாத பூட்டிடப் பட்டிருக்கும்.

ஆப்கான், ஈராக் போர் பில்டர் பேர்ஜின் தூண்டுதலாக இருந்தால் அதை நிருத்தும் சக்தி அவருக்கில்லாதுப் போயிருந்திருக்கலாம், வெளியில் சொல்ல முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கலாம். அதனால் தான் மூழ்கிய கப்பலின் கேப்டன் போல் இருந்தேன் என்று சூசகமாகக் கூறுகிறார்.

மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது.
அன்று உலகின் ஒட்டு மொத்த மக்களும் எதிர்த்த போதும் நிராகரித்தார். தன்னை அரியாசனத்தில் அமர்த்திய அமெரிக்காவின் ஒட்டு மொத்த மக்களும் எதிர்த்த போதும் நிராகரித்தார். அதனால் அவர் உயிருடன் வாழும் காலத்திலேயே ஹிட்லரை விடக் கொடியவன் என்ற முத்திரையை மக்கள் குத்தி விட்டதால் கலங்கத்தை துடைக்க போலிக் கண்ணிர் வடிக்கிறார்.

(என்னை) மறுப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடுமையாகத் தண்டிப்பேன். அவர்களுக்கு எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்.''  என்று அல்லாஹ் கூறியதை நினைவூட்டுவீராக! 3:56 

உணர்வுக்கு எழுதியக் கட்டுரை




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்