ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

ஈரான், கத்தார் ராணுவ கூட்டு முயற்சி.


ஏகஇறைவனின் திருப்பெயரால்...
அமெரிக்க, ஐரோப்பாவை கதிகலங்கச்செய்த ஈரான்இ கத்தார் ராணுவ கூட்டு முயற்சி.


நீண்ட நாட்களாக ஈரானுடன் கத்தார் கொண்டிருந்த ரகசிய நட்புறவை இப்பொழுது கத்தார் வெளிப்படையாகவே அறிவித்து விட்டது.

ராணுவம், மற்றும் இன்னப் பிற முக்கியத் துறைகளில் ஈரானின் தொழில் நுட்பத்துடன் இணைந்து கொள்வதில் கத்தார் ஆர்வமுடன் இருப்பதாக கத்தார் கடற்படை தளபதி முஹம்மது நாஸர் அல்முஹன்னதி அறிவித்திருக்கிறார்.

ஈரானின் தரை, மற்றும் கடற்படை நடத்தும் பயிற்சிகளில் கத்தார் ராணுவம் கலந்து கொள்வதற்கு முடிவு செய்துள்ளதாக மேஜர் ஜெனரல் ஹாமத் அல்அதிய்யாவும் அறிவித்துள்ளார்.

இவ்வாறு அறிவித்ததுடன் நில்லாமால் இருநாடுகளுக்கான ராஜ்ய உறவை வலுப்படுத்தும் விதமாக இருநாடுகளின் பிரதிநிதிகள் பரஸ்பரம் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

கத்தாருக்கு வருகை தந்திருந்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிப்படைக் குழுவினர் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

ஈராணிய கடற்படை தளபதி ஜெனரல் அலிரெஸா ஈரானுக்கான கத்தார் தூதர் அப்துல்லாஹ் ஸொஹ்ராபியை சந்தித்து நீண்ட நேரம் உரையாடி உள்ளார்.

கத்தார் கடற்படை தளபதி முஹம்மது நாஸர் அல்முஹன்னதி ஈரானின் ராணுவ உயர் அதிகாரிகளை சந்திப்பதற்காக ஈரானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது ஈரானின் கடற்படை மூன்று ஏவுகனை கப்பல்கள், இரண்டு போர் கப்பல்கள் பீரங்கி முழக்கத்துடன், ஏராளமான கடற்படை வீரர்களின் உற்சாகமான அணிவகுப்பு மரியாதை நடத்தி வரவேற்றுள்ளனர். 

அதற்கடுத்து கத்தார் அதிபர் ஷேக் ஹமாத் பின் கலீஃபா ஈரானுக்கு பயணம் மேற்கொண்டு ஈரான் அதிபர் மஹமூத் நிஜாதியை சந்தித்து உரையாடி உள்ளார். இந்த உரையாடல் ஒரு நாள் முழுவதும் நீடித்துள்ளது. 

அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்புகளும், கத்தார் கடற்படை தளபதியின் (ஈரானுடன் இணைந்து ராணுவத்தை பலப்படுத்தப் போகின்றோம் என்ற) துணிச்சலான அறிவிப்பும் ஏற்கனவே ஈரானின் மீது எரிந்து விழும் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேலின் சமீபத்திய பாலஸ்தீனத்தின் மீதான வரம்பு மீறலே இந்தக் கூட்டு முயற்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்