திங்கள், டிசம்பர் 11, 2017



ட்ரம்பின் அறிவிப்பால் பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்.
மதவெறியை மூலதனமாகக்கொண்டு பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்த ட்ரம்ப் அவ்வப்போது மதவெறியின் அடிப்படையில் சில சட்டங்களை இயற்றி அதை நடைமுறைப்படுத்த முடியாமல் நீதிமன்றம் சுருட்டி அதை அவருடைய முகத்தில் எறிந்த பல சம்பவங்கள் அவர் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து நடந்துள்ளது.
அந்த அளவுக்கு நடந்தும் ஓயாத ட்ரம்ப் நேற்று இஸ்ரேலின் தலைநகராக ஜெருஸலேமை அறிவிப்பது என்றும் டெல்அவிவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஜெருஸலேமுக்கு மாற்ற வேண்டும் என்று பேசி உள்ளார்.
வழமை போலமே அரபு நாடுகள் மற்றும் கூக்குரல் எழுப்பும் அதை சமாளிக்கத்துக் கொள்ளலாம் என்று நினைத்த ட்ரம்புக்கு மரண அடியாய் பாலஸ்தீனத்தின் பெத்தலகேம் நகரில் உள்ள கிருஸ்தவர்கள் ஒன்றுக் கூடி ட்ரம்புக்கு எதிராக போராட்டம் நடத்தி ட்ரம்பின் உருவப்படத்தை எரித்து உள்ளனர்.
பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், துருக்கி மற்றும் ஐரோப்பாவின் பல இடங்களில் அமெரிக்கா உட்பட போராட்டங்கள் வெடித்து பல இடங்களில் ட்ரம்பின் உருவ பொம்மை மற்றும் அமெரிக்கக் கொடிகள் எரிக்கப்பட்டு வருகின்றன.
நிலமை தீவிரமடைவதை அறிந்த ஐநா கவுன்சில் நாளை அசரமாக் கூடுகிறது.
வரலாறு தெரியாதவர்கள் நாட்டின் அதிபர்கள் ஆனால் இதுபோல இழிவடைந்தே போவார்கள்.
இந்தியாவின் வரலாறு தெரியாதவர்கள் இந்தியாவின் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டதால் திப்பு சுல்தானை தீவிரவாதி என்கின்றனர், பாபர் கோயிலை இடித்தார் என்கின்றனர், ஒளரங்கசேப் பதவிக்காக தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தார் என்று வாய்க்கு வந்தவாறு உளருகின்றனர்.
அதன் வரிசையில் ட்ரம்ப் ஃபாலஸ்தீன வரலாற்றை தெரியாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வெள்ளை மாளிகையில் அறிவித்து விட்டு இன்று உகல அளவிலான எதிர்ப்பையும், கடும் விமர்சனத்தையும் பெற்றுள்ளார். அதில் குறிப்பாக போப் ப்ரான்சிஸ் ட்ரம்பின் முடிவு வருத்தமளிக்கிறது என்று அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக