திங்கள், டிசம்பர் 11, 2017



ட்ரம்பின் அறிவிப்பால் பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்.
மதவெறியை மூலதனமாகக்கொண்டு பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்த ட்ரம்ப் அவ்வப்போது மதவெறியின் அடிப்படையில் சில சட்டங்களை இயற்றி அதை நடைமுறைப்படுத்த முடியாமல் நீதிமன்றம் சுருட்டி அதை அவருடைய முகத்தில் எறிந்த பல சம்பவங்கள் அவர் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து நடந்துள்ளது.
அந்த அளவுக்கு நடந்தும் ஓயாத ட்ரம்ப் நேற்று இஸ்ரேலின் தலைநகராக ஜெருஸலேமை அறிவிப்பது என்றும் டெல்அவிவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஜெருஸலேமுக்கு மாற்ற வேண்டும் என்று பேசி உள்ளார்.
வழமை போலமே அரபு நாடுகள் மற்றும் கூக்குரல் எழுப்பும் அதை சமாளிக்கத்துக் கொள்ளலாம் என்று நினைத்த ட்ரம்புக்கு மரண அடியாய் பாலஸ்தீனத்தின் பெத்தலகேம் நகரில் உள்ள கிருஸ்தவர்கள் ஒன்றுக் கூடி ட்ரம்புக்கு எதிராக போராட்டம் நடத்தி ட்ரம்பின் உருவப்படத்தை எரித்து உள்ளனர்.
பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், துருக்கி மற்றும் ஐரோப்பாவின் பல இடங்களில் அமெரிக்கா உட்பட போராட்டங்கள் வெடித்து பல இடங்களில் ட்ரம்பின் உருவ பொம்மை மற்றும் அமெரிக்கக் கொடிகள் எரிக்கப்பட்டு வருகின்றன.
நிலமை தீவிரமடைவதை அறிந்த ஐநா கவுன்சில் நாளை அசரமாக் கூடுகிறது.
வரலாறு தெரியாதவர்கள் நாட்டின் அதிபர்கள் ஆனால் இதுபோல இழிவடைந்தே போவார்கள்.
இந்தியாவின் வரலாறு தெரியாதவர்கள் இந்தியாவின் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டதால் திப்பு சுல்தானை தீவிரவாதி என்கின்றனர், பாபர் கோயிலை இடித்தார் என்கின்றனர், ஒளரங்கசேப் பதவிக்காக தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தார் என்று வாய்க்கு வந்தவாறு உளருகின்றனர்.
அதன் வரிசையில் ட்ரம்ப் ஃபாலஸ்தீன வரலாற்றை தெரியாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வெள்ளை மாளிகையில் அறிவித்து விட்டு இன்று உகல அளவிலான எதிர்ப்பையும், கடும் விமர்சனத்தையும் பெற்றுள்ளார். அதில் குறிப்பாக போப் ப்ரான்சிஸ் ட்ரம்பின் முடிவு வருத்தமளிக்கிறது என்று அறிவித்துள்ளார்.

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

உலகை உற்று நோக்கச் செய்த அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் போராட்டம்.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....


உலகை உற்று நோக்கச் செய்த அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் போராட்டம்.

 
அரசுக்கு எதிராக முதன் முதலில் மக்கள் புரட்சி வெடித்தது துனீசியாவில் அதையடுத்து எகிப்து, ஏமன், லிபியா, பஹ்ரைன் இறுதியாக சவுதியில் ஷியாப் பிரிவினர்களின் சூழ்ச்சியால் வெடிக்கவிருந்த கலகத்தை அல்லாஹ்வின் உதவியால் சவுதி அரசாங்கம் ஒடுக்கியது. மேற்காணும் நாடுகளில் அரசுக்கெதிரான கிளர்ச்சிகள் நடக்கும் பொழுது புகையை ஊதி நெருப்பாக்கும்  கைங்கரியத்தை அமெரிக்கா செய்யத் தவற வில்லை.

அவர்களின் நாட்டில் இவைகள் எல்லாம் நடக்காது என்றே எண்ணி வந்தனர் அவர்களால் சொர்க்க பூமி என்று வர்ணித்து வந்த இஸ்ரேலில் வெடித்தது முதல் கிளர்ச்சி அதைப் பார்த்து மலைத்தேப் போயினர். இது அமெரிக்கா, ஐரோப்பாவில் வெடிக்காமல் இருப்பதற்கான ஆயத்தப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுதே கடந்த மே மாதம் ஸ்பெய்னில் வெடித்தது அடுத்தக் கிளர்ச்சி ஸ்பெயின் மேட்ரிட் நகரில் அரசைக் கண்டித்து பிரம்மாண்டமாகப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

இதைப் பார்த்த அமெரிக்க மக்களால் சும்மா இருக்க முடியவில்லை அமெரிக்காவிலும் பொருளாதாரச் சரிவு, வேலையில்லாத் திண்டடாட்டம், போன்றவைகளைக் கூறிப் போராட்டம் நடத்த முடிவு செய்து முதல் கட்டப் போராட்டத்தை அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான பூங்கா ஒன்றில் தொடங்கினர். இதிலிருந்து தான் வால்ஸ்ட்ரீட் போராட்டம் என்றப் பெயர் உருவானது.

பூங்கா உரிமையாளரைத் தூண்டி விட்டு போராட்டக் காரர்களை வெளியேற்றச் செய்தது அமெரிக்க அரசு. இதையறிந்த போராட்டக் காரர்கள் சினம் கொண்டு போராட்டத்தை வீரியப் படுத்தும் விதமாக அமெரிக்காவின் முக்கியப் பகுதிகளிலும் அமெரிக்காவிற்கு வெளியிலும் நடத்துவது என்று முடிவு செய்து அதை சூட்டோடு சூடாக நடைமுறைப் படுத்தவும் தொடங்கினர் அது அமெரிக்காவிற்கு வெளியில் 80 நாடுகளில் போராட்டங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

டைம் சதுக்கத்தில் நடந்தப் போராட்டத்தில் போராட்டக் காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் நடந்த மோதலில் இரண்டு போலீஸாரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. ரோமில் நடந்த போராட்டத்தில் போராட்டக் காரர்களுக்கும் போலீஸாருக்கு இடையில் நடந்த மோதலில் 26 போலீஸார் படுகாயமடைந்துள்ளனர்.

இது தவிர லண்டனின் செயின்ட்பால், ஆஸ்திரேலியாவின் சிட்னி, ஜப்பானின் டோக்யோவில் நடந்த போராட்டங்கள் பெரும் பதட்டத்துடன் முடிந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அக்டோபர் 16 அன்று நியூயார்க் மன்ஹாட்டன் நகரில் மீண்டும் ஆயிரம் பேர் கூடி வால்ஸ்ட்ரீட் ஆக்ரமிப்புப் போராட்டம் என்றப் பெயரில்; பேரணி ஒன்றை நடத்தி உள்ளனர் பொருளாதாரச் சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம் என்றுக்கூறிப் போராட்டத்தைத் தொடங்கியவர்கள் இன்று ஆக்ரமிப்பு என்றப் பெயரில் போராட்டத்தை நடத்தியதால் அமெரிக்க அரசு அதிர்ச்சிக்குள்ளாகி போராட்டக் காரர்களை அதிகமாக கைது செய்ய உத்தரவுப் பிறப்பித்துள்ளது இதனடிப்படையில் 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிற நாடுகளை ஆக்ரமித்து, பிற நாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டிப் பிழைப்பு நடத்திய அமெரிக்க, ஐரோப்பிய ஆட்சியாளர்களின் தவறானப் பொருளாதாரக் கொள்கையால் திடீரென சரிந்த பொருளாதாரத்தால் ஏற்பட்ட வறுமை. வேலையில்லாத் திண்டாட்டத்தை நிமிர்த்து நிருத்துவதற்குள் உள்நாட்டு கிளர்ச்சியால் அதள பாதாளத்திற்கு நாட்டை இழுத்துச் செல்வதிலிருந்து தடுத்த நிருத்துவது கடினம்.

இவர்களின் பிற நாடுகள் மீதான ஆக்ரமிப்புகளால் வாரிசுகளை இழந்த உறவுகள் இறைவனிடம் கை ஏந்தியதை இவர்கள் அனுபவிக்கும் காலத்தின் தூரம் அதிகமில்லை என்பதையே மேற்காணும் நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன.

...அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை. புகாரி: 1495


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

சனி, அக்டோபர் 29, 2011

மூழ்கிய கப்பலின் கேப்டன்.

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

فَأَمَّا الَّذِينَ كَفَرُواْ فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ

(என்னை) மறுப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடுமையாகத் தண்டிப்பேன். அவர்களுக்கு எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்.''  என்று அல்லாஹ் கூறியதை நினைவூட்டுவீராக! 3:56




மூழ்கிய கப்பலின் கேப்டன்.

முக்கிய முடிவுகள் என்ற தலைப்பில் மோசமான முடிவுகளை மேற்கொண்ட ஜார்ஜ் புஷ் தனது ஆட்சி காலத்தில் நடந்த சில சம்பவங்களை புத்தகமாக எழுதி இருப்பதாகவும் புத்தகம் விற்பனைக்கு வந்த முதல் நாளே 1 லட்சத்து 70 ஆயிரம் பிரதிகள் விற்று இருப்பதாக பத்திரிகை செய்திகள் கூறுகிறது.

தான் எழுதிய புத்தகத்தை எல்லோரும் படித்து தன்னை மன்னிக்க வேண்டும் என்பதற்காக ஈராக் விஷயத்தில் தவறிழைத்து விட்டதாக குறிப்பிட்டிருப்பதை முன்கூட்டியே வெளிப்படுத்தி புத்தக விற்பனைக்காக விளம்பரத்தை தேடிக் கொண்டார்.

ஈராக்கில் போர் தொடுப்பதற்காக எடுத்த முடிவு தவறான முடிவு என்றும், ஈராக் போரில் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டதும் தவறான முடிவு என்றும், ஈராக் போர் நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் தான் மூழ்கிய கப்பலின் கேப்டன் போல் இருந்ததாகவும் எழுதி இருப்பதாக அந்த பத்திரிகை செய்தி கூறுகிறது.

இது இப்பொழுது பிறக்கும் ஞானோதயம் அல்ல அன்று சிறு குழந்தையும் கூட இதைத் தவறு என்று பேனர் பிடித்து உலகம் முழுவதும் ஊர்வலமாக சென்றது உலக மக்களுக்கு நினைவிருக்கும்.

ஒரு வாதத்திற்காக இப்பொழுது அவர் வருந்துவதை உண்மை என்று எடுத்துக் கொள்வதாக இருந்தால் சத்தாம் ஹூசைன் தூக்கிலேற்றப்பட்டு பேரழிவு ஆயுதம் ஈராக்கில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டப் பின் அவரது இறுதியான ஈராக் பயணத்தில் ஈராக் பிரதமர் நூரி அல்மாலிக்கி ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது சொல்லி இருந்திருக்கலாம், மாறாக ஈராக் விஷயத்தில் தான் எடுத்த முடிவு சரி தான் என்று அதிலும் ஆனித்தரமாக அடித்துக் கூறினார் அதனால் தான் முன்தாஜர் அல்ஜெய்தியின் ஷூ க்கள் இரண்டும் அவரது முகத்தை நோக்கி சினம் கொண்டு சீறிப் பாய்ந்தன.

1 லட்சத்து, 9 ஆயிரத்து, 32 உயிர்களை ஈராக்கில் மட்டும் பலிகொடுத்து அடால்ப் ஹிட்லரையும், பெனிட்டோ முசோலினியையும் அமெரிக்கா ஓவர்டேக் செய்து விட்டது என்று விக்கிலீக்ஸ் உண்மையைப் போட்டு உடைத்து விட்டக் காரணத்தால் ஏற்கனவே எழுதிக் கொண்டிருந்த தனது சுயசரிதையில் போலியான இந்த வருத்தத்தை மேலதிகமாக சேர்த்திருக்கலாம்.

முஸ்லீம்களை இனச் சுத்திகரிப்பு செய்வதற்கு சதி திட்டம் தீட்டும் யூதர்களின் கைக்கூலி இவர். இந்த பயங்கரவாதி புஷ் யூத சியோனிஸ்டுகளின் கைக்கூலி என்பதற்கு யூத சியோனிஸ்டுகளில் பண முதலைகள் நடத்தும் பயங்கரவாத பில்டர்பேர்ஜ் எனும் ரகசிய அமைப்பின் உறுப்பினர் என்பதையும், இந்த பயங்கரவாத அமைப்பின் ரகசிய கூட்டமொன்றில் கலந்துகொண்ட மாட்ரிக்ஸ் பத்திரிக்கை ஆசிரியர் எழுதிய கட்டுரையில்மேற்குலகின் முக்கிய பிரமுகர்கள் ஸ்காட்லாந்து கிராமப்புர ஹோட்டல் ஒன்றில் அதிதீவிர பாதுகாப்புடன் கூடிய 46 வது கூட்டத்தில், உலகில் தம் ஆதிக்க எல்லையை விரிவுபடுத்தி தங்கள் கலாச்சார பண்பாட்டு திட்டங்களை திணிப்பது சம்பந்தமாகவும், வல்லரசு நாட்டின் ஆட்சியாளர்களாக யார் வர வேண்டும், யார் வரக்கூடாது என்பது வரை விவாதித்து முடிவெடுக்கப்பட்டு இதற்கான பொறுப்பை நியூஜர்ஸி கவர்னர் கிறிஸ்டின் லீட் வயிட்மான் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று எழுதி இருந்ததை சவுதியின் அல்முஜ்த்தமா பத்திரிகை அம்பலப் படுத்தியது நினைவிருக்கலாம்.

அகண்ட இஸ்ரேல் உருவாவதற்கும், ஆப்கான், ஈராக் மீதான பண்ணாட்டுப் படைகளின் பயங்கர தாக்குதலுக்கும் பிண்ணனியில் 1954 முதல் ரகசியமாக இயங்கி வரும் இந்த சர்வதேச பயங்கரவாத அமைப்பே காரணமாக இருக்கும் என்பதற்கு ஆதாரமாக தி நியு வேல்ட் ஆர்டர் இன்டலிஜன்ஸ் அப்டேட் என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் கொஸோவோ போர் முடிவுக்கு வந்தால் ஸைப்ரஸில் மற்றொரு போர் வெடிக்க வேண்டும் என்ற திட்டம் தீட்டப்பட்டதை எழுதி இருந்தார்.

இவ்வமைப்பில் இயற்றப்படும் தீர்மாணங்கள் வெளியில் தெரிய விட மாட்டார்கள் மீறி தெரிய வந்தால் என்ன விலை கொடுத்தேனும் தடுப்பார்கள் அல்லது செயலிழக்கச் செய்வார்கள். விடுதலைப் புலிகள் கழுத்தில் மாட்டி விடப்பட்ட சயனைடு புட்டியைப் போல் பில்டர்பேர்ஜ் உறுப்பினர்களுடைய வாய்களில் திறக்க முடியாத பூட்டிடப் பட்டிருக்கும்.

ஆப்கான், ஈராக் போர் பில்டர் பேர்ஜின் தூண்டுதலாக இருந்தால் அதை நிருத்தும் சக்தி அவருக்கில்லாதுப் போயிருந்திருக்கலாம், வெளியில் சொல்ல முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கலாம். அதனால் தான் மூழ்கிய கப்பலின் கேப்டன் போல் இருந்தேன் என்று சூசகமாகக் கூறுகிறார்.

மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது.
அன்று உலகின் ஒட்டு மொத்த மக்களும் எதிர்த்த போதும் நிராகரித்தார். தன்னை அரியாசனத்தில் அமர்த்திய அமெரிக்காவின் ஒட்டு மொத்த மக்களும் எதிர்த்த போதும் நிராகரித்தார். அதனால் அவர் உயிருடன் வாழும் காலத்திலேயே ஹிட்லரை விடக் கொடியவன் என்ற முத்திரையை மக்கள் குத்தி விட்டதால் கலங்கத்தை துடைக்க போலிக் கண்ணிர் வடிக்கிறார்.

(என்னை) மறுப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடுமையாகத் தண்டிப்பேன். அவர்களுக்கு எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்.''  என்று அல்லாஹ் கூறியதை நினைவூட்டுவீராக! 3:56 

உணர்வுக்கு எழுதியக் கட்டுரை




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

ஈரான், கத்தார் ராணுவ கூட்டு முயற்சி.


ஏகஇறைவனின் திருப்பெயரால்...
அமெரிக்க, ஐரோப்பாவை கதிகலங்கச்செய்த ஈரான்இ கத்தார் ராணுவ கூட்டு முயற்சி.


நீண்ட நாட்களாக ஈரானுடன் கத்தார் கொண்டிருந்த ரகசிய நட்புறவை இப்பொழுது கத்தார் வெளிப்படையாகவே அறிவித்து விட்டது.

ராணுவம், மற்றும் இன்னப் பிற முக்கியத் துறைகளில் ஈரானின் தொழில் நுட்பத்துடன் இணைந்து கொள்வதில் கத்தார் ஆர்வமுடன் இருப்பதாக கத்தார் கடற்படை தளபதி முஹம்மது நாஸர் அல்முஹன்னதி அறிவித்திருக்கிறார்.

ஈரானின் தரை, மற்றும் கடற்படை நடத்தும் பயிற்சிகளில் கத்தார் ராணுவம் கலந்து கொள்வதற்கு முடிவு செய்துள்ளதாக மேஜர் ஜெனரல் ஹாமத் அல்அதிய்யாவும் அறிவித்துள்ளார்.

இவ்வாறு அறிவித்ததுடன் நில்லாமால் இருநாடுகளுக்கான ராஜ்ய உறவை வலுப்படுத்தும் விதமாக இருநாடுகளின் பிரதிநிதிகள் பரஸ்பரம் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

கத்தாருக்கு வருகை தந்திருந்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிப்படைக் குழுவினர் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

ஈராணிய கடற்படை தளபதி ஜெனரல் அலிரெஸா ஈரானுக்கான கத்தார் தூதர் அப்துல்லாஹ் ஸொஹ்ராபியை சந்தித்து நீண்ட நேரம் உரையாடி உள்ளார்.

கத்தார் கடற்படை தளபதி முஹம்மது நாஸர் அல்முஹன்னதி ஈரானின் ராணுவ உயர் அதிகாரிகளை சந்திப்பதற்காக ஈரானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது ஈரானின் கடற்படை மூன்று ஏவுகனை கப்பல்கள், இரண்டு போர் கப்பல்கள் பீரங்கி முழக்கத்துடன், ஏராளமான கடற்படை வீரர்களின் உற்சாகமான அணிவகுப்பு மரியாதை நடத்தி வரவேற்றுள்ளனர். 

அதற்கடுத்து கத்தார் அதிபர் ஷேக் ஹமாத் பின் கலீஃபா ஈரானுக்கு பயணம் மேற்கொண்டு ஈரான் அதிபர் மஹமூத் நிஜாதியை சந்தித்து உரையாடி உள்ளார். இந்த உரையாடல் ஒரு நாள் முழுவதும் நீடித்துள்ளது. 

அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்புகளும், கத்தார் கடற்படை தளபதியின் (ஈரானுடன் இணைந்து ராணுவத்தை பலப்படுத்தப் போகின்றோம் என்ற) துணிச்சலான அறிவிப்பும் ஏற்கனவே ஈரானின் மீது எரிந்து விழும் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேலின் சமீபத்திய பாலஸ்தீனத்தின் மீதான வரம்பு மீறலே இந்தக் கூட்டு முயற்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

அமெரிக்க சூறாவளி


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُّمْطِرُنَا بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُم بِهِ رِيحٌ فِيهَا عَذَابٌ أَلِيمٌ

46:24. தமது பள்ளத்தாக்குகளை நோக்கி வரும் மேகமாகவே அதை அவர்கள் கருதினார்கள். ''இது நமக்கு மழை பொழியும் மேகமே'' எனவும் கூறினர். ''இல்லை! எதற்கு அவசரப்பட்டீர்களோ அதுவே இது. துன்புறுத்தும் வேதனை நிரம்பிய காற்றாகும்'' (என்று கூறப்பட்டது.)


அமெரிக்க சூறாவளி.

கட்டுரை எழுதியது  Saturday, August 19, 2006

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட இருவகையான சீற்றங்கள் மூலம் கனிசமான உயிர் சேதமும், மிதமிஞ்சிய பொருளாதாரச் சரிவும் ஏற்பட்டதாக மீடியாக்கள் கூறின அவர்களுடைய விஷயத்தில் மீடியாக்கள் எப்பொழுதுமே கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கும். ஆனாலும் உலக நாடுகள் அளித்த நன்கொடைகளை ( நிவாரண நிதி ) பெற்றுக்கொண்டதன் மூலம் மிதமிஞ்சிய பொருளாதாரச் சரிவு ஓரளவுக்கு உண்மை தான் என்பதை அறிந்து கொண்டோம்.

நபிமார்களும், வேதங்களும் வந்து கொண்டிருந்த காலகட்டங்களில் இது போன்றே பல முறைகள் நடந்துள்ளன. இவைகள் நடப்பதற்கு முன்னதாகவே அந்த சமுதாய மக்களிடம் இது போன்று ஒரு அழிவு உங்களிடம் வரவிருக்கிறது ஆகவே திருந்திக் கொள்ளுங்கள் உங்கள் தவறுகளுக்கு இறைவனிடம் வருந்திக் கொள்ளுங்கள் என்று தனது தூதர்கள் மூலம் அல்லாஹ் எச்சரித்து அதை மக்கள் மீறும் போது இது போன்ற சீற்றங்களை ஏவி அவர்களை அழித்து விட்டு அதில் வேறொரு சமுதாயம் உருவாக்கப்பட்டதையும் அல்லாஹ் தனது திருமறையில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான், அதுமட்டுமல்ல அவ்வாறு இறைவனின் ஏவலில் சீறிய சீற்றங்களில் சிக்கி சிதறுண்ட நகரங்கள் இடிபாடுகளுடன் இன்றும் காட்சியளித்துக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறான்.

அவைகள் பொய்யல்ல மாறாக இன்றும் குறிப்பிட்ட அவ்விடங்கள் அல்லாஹ் கூறிய பிரகாரம் அரேபிய பாலைவெளிகளில் வீற்றிருப்பதை நம்மைக்காட்டிலும் அவர்கள் அறிந்தவர்காளாக உள்ளனர்.

முதலில் அமெரிக்காவில் ஏற்பட்ட இறைவனின் சீற்றத்தில் பலியான உயிர்களுக்காக நாம் நம்முடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

உயிர்களின் மீது பரிவு கொள்வது ஒவ்வொரு முஃமினுடைய கடமையாகும். மதம் என்று வரும் பொழுது அதில் மனிதன் மாச்சர்யம் கொண்டாலும், உயிர் என்று வரும் பொழுது அவ்வுயிர் எம்மதத்தைச் சார்ந்ததாக (மனித இனம், மிருக இனம் எதுவாக) இருந்தாலும் அதன் மீது பரிவு கொள்ள வேண்டும்.

ஈரமுள்ள ஈரல் கொண்ட ஒவ்வொரு உயிரிணத்தின் மீதும் கருனை கொள்வது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி) நூல் : அபூ ததாவூத்

இவ்விஷயத்தில் அன்றும், இன்றும் முஸ்லிம்கள் தனித்தன்மையுடன் சிறந்து விளங்கியதை நாம் பட்டியிலிட்டு எழுத முடியும் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் நடந்த யுத்தங்களாகட்டும், அதன் பின் சஹாபாக்கள் காலத்தில் நடந்த யுத்தங்களாகட்டும். அவர்கள் மற்ற நாடுகளை வெற்றி கொள்ளும்போது அங்குள்ள மனிதர்கள் மீதும், அவர்களின் அசையும். ஆசையாச்சொத்துக்களின் மீதும் எவ்வாறு பரிவுடன் நடந்து கொண்டார்கள் என்பதையும், இதே மற்றவர்களின் யுத்தங்களின் போது சிலுவை யுத்தம் முதல் சமீபத்தில் நடந்த ஆப்கான், ஈராக் யுத்தங்கள் வரை அவர்கள் மனித உயிர்களின் மீது எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதையும் இஸ்லாமிய ஊடகங்களில் பார்த்திருக்கிறோம்.

ஹூது (அலை) அவர்கள் காலத்தில் ஆது சமுதாயத்தவர்கள் மீது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏவி விட்ட கொடுங்காற்றைப் பற்றி ஒரு தலைப்பில் எழுதினோம். அதை இப்பொழுது நினைவுப படுத்தினால் நன்றாக இருக்கும். அதுவும், சமீபத்திய அமெரிக்காவில் வீசிய ( ரீட்டா ) எனும் கொடுங்காற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ரீட்டாவும் இறைவனின் கோபம் தான் என்பது தெளிவாகும். பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம், 46:24.

அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, ''எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?'' என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள். 41:15.

மாட மாளிகைகளையும், சொகுசு பங்களாக்களையும் அழகிய கலை நுட்பத்துடன் வடிவமைத்து இன்றைய அமெரிக்கர்கள் போன்று அன்றைய ஆது சமுதாயத்தவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர்.

அவர்களுடைய பூமியில் மிகவும் உயரமான இடத்தில் மக்கள் கண்டு வியப்புறும் வகையில் வின்னை முட்டும் நினைவுச் சின்னங்களை அமைத்துக்கொண்டனர். நிரந்தரமாக வாழ்வோம் அல்லது மரணித்தாலும் மரணத்துடன் முடிந்து விட்டது மீண்டும் எழுப்பப் பட மாட்டோம் என்று இன்றைய அமெரிக்கர்கள் போல் அன்றைய ஆது சமுதாயத்தவர்கள் அனுபவித்தார்கள்.

''நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா? 26:128. இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா? 26:129.

தங்களுக்கு கீழுள்ளவர்கள் சிறிய தவறைச் செய்தாலும் குவான்டனாமோ சிறையில் அடைத்து கடும் சித்ரவதை செய்து மகிழ்ந்ததைப்போல் செய்யாத குற்றத்திற்காக ஆப்கனையும், ஈராக்கையும் அடித்து சல்லடையாக்கி மகிழ்ந்த அமெரிக்க டாம்பீக அரசைப்போல் அன்றைய ஆது சமுதாயததவர்கள் செய்து மகிழ்ந்ததாக அல்லாஹ் குறிப்பிட்டு எச்சரிக்கிறான்.

''இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.26:129. ''எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிப்படுங்கள். 26:131.

ஆனாலும் அவர்கள் அல்லாஹ்வின் கூற்றுக்களை தொடர்ந்து மறுத்தார்கள் அதனால் அல்லாஹ் அவர்கள் மீது கடும் கோபம் கொண்டு சாபமிடலானான்

. . .எனவே, அவர்கள் இவ்வுலகிலும், நியாயத்தீர்ப்பு நாளிலும் (அல்லாஹ்வின்)சாபத்தினால் தொடரப்பெற்றனர்; அறிந்து கொள்வீர்களாக! நிச்சயமாக 'ஆது' கூட்டத்தார் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள்; இன்னும் அறிந்து கொள்வீர்களாக! ஹூதுடைய சமுதாயமான 'ஆது' கூட்டத்தாருக்கு கேடுதான். 11:60.

வெகுவிரைவில் அல்லாஹ்விடமிரந்து தங்களுக்கு வரவிருக்கும் கேடு எனும் பேரழிவை நம்ப மறுத்து அல்லாஹ்விடமிருந்து வர இருக்கும் பேரழிவை வரவழைத்துக் காட்டும் படி நபியவர்களிடம் திமிர் வாதம் பேசினர்.. . . நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்'' என்று கூறினார்கள்.7:69.

ஒரு நாள் மேகம் வானத்தின் வெளிச்ச மண்டலத்தை மூடுகிறது பூமியில் எங்கும் இருள் படலமாகிறது அதைப்பார்த்தும் ஆது கூட்டத்தார் அல்லாஹ் தனது நபியின் மூலம் விடுத்த எச்சரிக்கைகள் நினைவுக்கு வர வில்லை. அதை அல்லாஹ்வின் வேதனை வரப்போகிறது என்று உணர வில்லை மாறாக

. . . .நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம், நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்துறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது. ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?) அல்குர்ஆன் 54:18 லிருந்து 21 வரை.

படிப்பினைகள் : வின்னை முட்டும் கோபுரங்களும், மாட மாளிகைகளும் நினைவுச் சின்னங்களையும். பூமியில் நிர்மானித்தவர்களாகிய தனக்கு கீழுள்ளவர்களை சிறிய குற்றங்களுக்காக சிதரவதை செய்து மகிழ்ந்த மாபெரும் உடல் வாலிமைப் பெற்றவர்களாகிய, தன்னைப் போன்ற வலிமை வாய்ந்தவர்கள் பூமியல் உண்டோ ? என மார் தட்டிய பேர் வழிகள் நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றில் ( புயலில்) சிக்கி சிதைந்து, மண்ணோடு மண்ணாக மறைந்து போனர் . சுப்ஹானல்லாஹ்.


ஆப்கான் அடித்து நொருக்கப்பட்டு மனித உயிர்களைக் கொன்று குவியல், குவியல்களாக குவிக்கப்பட்டு, அதன் வடு ஆருவதற்கு முன் ஈராக்கும் அதே வழியில் சிதைக்கப்பட்டு சதாம் கைது செய்யப்பட்டப்பின் டபிள்யூ புஷ் கீழ்கானுமாறு கூறினார் எங்களை எதிர்ப்பவர்களுக்கு இது தான் கெதி என்று இருமாப்பாய் கர்ஜித்தார்;. மேல்படி அறிக்கையைப் படித்ததும் லிபியாவின் அதிபர் தாமதமின்றி அவரிடம் சரணடைந்ததும் நினைவிருக்கும்.

அன்று ஆது சமுதாயத்தவர்கள் கூறியதற்கும். இன்று இவர்கள் கூறுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ? அதனால் அவர்களின் மீது ஏவியது போன்ற கொடுங்காற்றை இவர்கள் மீதும் ஏவினான் (இரண்டிற்குமிடையில் உள்ள ஒரு வித்தியாசம் அன்று முழுமையாக அழித்தொழித்தான் இன்று படிப்பினைக்காக விட்டு வைத்துள்ளான் )


அநியாயக்காரன் மீண்டும் வெற்றிப் பெற்று விட்டானே ? என்று அன்று நாம் கவலை அடைந்தோம் ஆனால் இன்று அல்லாஹ்வின் ஏற்பாடு வேறு மாதிரியாக இருந்ததை நாம் அறிய  வில்லை.


இனவெறிப்பிடித்த ஜார்ஜ் புஷ்ஷூம், அவரது மகன் டபிள்யூ புஷ்ஷூம் இஸ்லாத்தை தவறான மதம் என்று பிரகடனப் படுத்தியும், முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தியும் உலக அப்பாவி மக்களை நம்ப வைத்து தங்களது வலிமை வாய்ந்த ரானுவத்தைக் கொண்டு அப்பாவி முஸ்லிம் உயிர்களை வேட்டையாடி கொன்றுக் குவித்தனர். முஸ்லிம் மக்கள் செத்து மடிந்ததைக் கண்டு பூரிப்படைந்த புஷ்ஷூம், டபிள்யூ புஷ்ஷூம் கொடுங்கோலர்களாகிய தங்களை மீண்டும் ஆதரித்து வாக்களித்த தங்களது இனத்து மக்கள் இறைவனின் சீற்றத்தில் மூழ்கி மடிந்ததைக் கண்டு பூரிப்படைந்திருப்பார்களா ? மாறாக துடி துடித்திருப்பார்கள்.


வல்ல அல்லாஹ் அவரை மீண்டும் அரச பதவியில் அமர்த்தி தான் யார் ? என்பதை தன்னுடைய அதிகாரம் என்னவென்பதை அவர்களுக்கு உணர்த்தி அவர்களுடைய டாம்பீக பேரரசை இலோசான ஒரு உலுக்கு உலுக்கி உலக நாடுகளிடம் அவர்களை பிச்சை எடுக்க வைத்தான்? அதிலும் முக்கிமாக கவனிக்க வேண்டிய விஷயம் அன்றாடம் காய்ச்சி (ஏழை) நாடுகளிடமும் கை நீட்ட வைத்தான்.

அவர் அந்த தேர்தலில் தோல்வியுற்றிருந்தால் நிச்சயம் நாம் சந்தோஷப்பட்டிருப்போம் மாற்றமில்லை, ஆனால் அதை விட சந்தோஷம் இப்பொழுது அவர் உலக நாடுகளில் பிச்சை எடுத்ததும். அவர் பதவியிலிலிருக்கும் போதே தனது நாட்டின் பொருளாதமாரம் அதள பாதாளத்தில் சென்று கொண்டிருப்பதைப் பார்க்க வைத்து உள்ளம் குமுறுவதை அவருக்கு அல்லாஹ் துனியாவில் தண்டனையாக்கியதுடன், மறுமையில் மாபெரும் தண்டனையை சித்தப் படுத்தி வைத்திருப்பான்.


எந்த ஒரு அரசனும் பூமியில் தனது நாடு வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ள முடியாது அல்லாஹ்வின் அர்ஷே நிலையான வல்லரசாகும் என்பதை அமெரிக்காவின் சமீபத்திய பொருளனாதாரச் சரிவு நிருபிக்கிறது. பொருளாதாரம் சரிந்து விட்டால் வல்லரசு எனும் டாம்பீகம் மண்ணைக் கவ்வும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.


மேலும் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் தனது வேதனையை இறக்க நினைத்தால் முதலில் அந்நாட்டின் செல்வத்தைத் துடைத்தெடுத்து வறுமையையும் ? பஞ்சத்தையும் புகுத்துவான் அது அவனுடைய முன்னெச்சரிக்கையாகும் அதிலும் அவர்கள் திருந்த வில்லையென்றால் அவர்களையே துடைத்தெறியக் கூடிய மாபெரும் சீற்றத்தை ஏவுவான். பின்னர் நாம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பஞ்சம் பிடிக்கச் செய்து, விவசாயப் பலன்களைக் குறைத்துத் தண்டித்தோம்- அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக. 7:130.

அதிலும் அவர்கள் திருந்த வில்லை அதன் பின் ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாமல் அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு இருந்ததால், அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம். 7:136.

இப்பொழுது அமெரிக்காவில் இலோசான சீற்றத்தினால் ஏற்பட்டப் பஞ்சத்தின் மூலம் அவர்கள் படிப்பினைப் பெறவில்லை என்றால் குர்ஆனில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்ற ஆது சமுதாயத்தவர்களுடைய வரலாறைப் படித்து படிப்பினைப் பெறட்டும்.




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம். பாரூக்

கட்டுரை எழுதியது

Saturday, August 19, 2006